சென்னை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மழைக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகல் குறித்து விளக்கம் அளித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினைப் பார்வையிட்டு வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின்னர் உதயநிதி செய்தியாளர்களிடம், […]