ஹங்கேரியாவின் நைரெகிஹாசாவில் (Nyíregyháza) பிறந்தவர் பெர்னாடெட் சாபோ. சிறுவயது முதல் வறுமையில் வாடிய குடும்பம், நெதர்லாந்துக்குக் குடிபெயர்ந்தது. ஒருகட்டத்தில் வறுமையின் காரணமாக பெர்னாடெட் சாபோ பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டார்.

2009 பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி பாலியல் குற்றங்களில் ஈடுபட்டிருந்தார். குறிப்பிட்ட நேரம் கடந்தும், பெர்னாடெட் சாபோவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்பதால், அவரின் தோழிகள் பெர்னாடெட் சாபோவைத் தேடிச் சென்றிருக்கிறார்கள். அங்கு 10-க்கும் மேற்பட்ட இடத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார் பெர்னாடெட் சாபோ. அதைத் தொடர்ந்து காவல்துறை சம்பவ இடத்துக்கு வந்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கியது.
ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. கொலையாளி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. பல கோணங்களில் விசாரித்தும் உண்மை வெளிவரவில்லை. இது தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரி, “கொலை செய்யப்பட்டதை யாரோ ஒருவர் பார்த்திருக்க வேண்டும். அதில் எங்களுக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அவர்கள் அதை வெளியே கூறவில்லை. யாருக்காக இதைச் செய்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. அதனால்தான் புதிய வழியில் இந்த வழக்கை மக்களிடம் கொண்டு வந்திருக்கிறோம்” எனக் குறிப்பிட்டு ஹாலோகிராம் ஒன்றைச் சுட்டிக் காட்டினார்.
Police in Amsterdam are set to use a life-size hologram of a murdered sex worker to try to catch her killer 15 years after her death. pic.twitter.com/GsYp4XfHOt
— Mohammad V (@Mohamma68749612) November 12, 2024
அதில், 19 வயதான பெர்னாடெட் சாபோவின் உருவம் 3D-யில் தெரிகிறது. நாற்காலியில் அமர்ந்திருக்கும் பெர்னாடெட் சாபோ, மக்கள் வருவதைப் பார்த்து எழுந்து வருகிறார். அப்போது அவருக்கு முன்னாள் இருக்கும் கண்ணாடியில் Help என வருகிறது. அந்த கண்ணாடி அறை முழுவதும் பெர்னாடெட் சாபோவின் புகைப்படங்கள், அவர் கொலை தொடர்பான தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. தற்போது நெதர்லாந்து காவல்துறையின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.