TRAI பெயரில் மோசடி அழைப்புகள்… பணத்தை இழந்துவிடாதீர்கள் என எச்சரிக்கை…

டிஜிட்டல் யுகத்தில், நமது வேலைகள் பல மிகவும் எளிதாகி விட்டாலும், ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் பார்கிறோம். இந்நிலையில் TRAI ஸ்பேம் கால்கள் மூலம் நடக்கும் மோசடி குறித்து சில முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

சைபர் மோசடி ஆசாமிகள் மற்றும் ஹேக்கர்கள் மக்களை ஏமாற்ற பல்வேறு விதமான யுக்திகளையும் கையாளுகின்றனர். தற்போது TRAI என்னும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பெயரில் ஒரு புதிய மோசடி நடக்கிறது. இந்த டிஜிட்டல் மோசடியின் மூலம் பணத்தை இழக்கும் அப்பாயம் உள்ளதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

TRAI என்ற பெயரில் உங்களுக்கு அழைப்புகளை மேற்கொண்டு, இன்றிரவு உங்கள் மொபைல் எண் செயலிழந்திடும் எனக் கூறி மோசடி நடக்கிறது.  மொலைல் எண் செயலிழக்காமல் இருக்க கொடுக்கப்படும் இணைப்புகளை கிளிக் செய்யுமாறு கூறி, இதன் மூலம் போலியான லிங்குகளை அனுப்பி தரவுகள்    திருடப்படுவதால், எச்சரிக்கையாக இருங்கள் என்று TRAI X தளத்தில் பதிவிட்டுள்ளது. 

ஸ்பேம் அழைப்புகள் குறித்த புகாரிகளை போர்ட்டலில் தெரிவிக்குமாறு TRAI மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஸ்பேம் அழைப்பில் எண் ஏதேனும் அழுத்தமாறு கூறினால், அதைச் செய்யாதீர்கள் எனவும், அல்லது மோசடி செய்பவர்கள் அனுப்பிய இணைப்பைக் கிளிக் செய்யாதீர்கள் எனவும் TRAI எச்சரித்துள்ளது.

2024  ஜனவரி மற்றும் ஏப்ரல் மாத காலகட்டத்தில், சைபர் குற்றங்களால் தோராயமாக ரூ.120 கோடி இழப்பை  இந்தியா சந்தித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 27 அன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் டிஜிட்டல் மோசடி சம்பவங்கள் பெருமளவு அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துதார். மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

2024 முதல் காலாண்டில் சுமார் 7.4 லட்சம் சைபர் கிரைம் புகார்கள் வந்ததாக இந்தியாவின் சைபர் குற்றங்களை பதிவதற்கான தேசிய போர்டல் (NCRP) தெரிவித்துள்ளது. 2023ம் ஆண்டில் மொத்தம் 15.56 லட்சம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும்,  2022ம் ஆண்டில் இந்த புகார் எண்ணிக்கை 9.66 லட்சம் என்ற அளவிலும், 2021ம் ஆண்டில் இந்த புகார் எண்ணிக்கை 4.52 லட்சம்  என்ற அளவிலும் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தில் (I4C) CEO ராஜேஷ் குமார் இது குறித்து கூறுகையில், இந்த காலகட்டத்தில் சைபர் குற்றங்கள் தொடர்பான இழப்புகளில், வர்த்தக மோசடிகளால் ₹ 1,420.48 கோடியும், முதலீட்டு மோசடிகளால் ₹ 222.58 கோடியும், காதல் / டேட்டிங் மோசடிகளால் ₹ 13.23 கோடியும் அடங்கும் என தெர்வித்தார்.

டிஜிட்டல் கைது மோசடி ஒரு நூதனமான மோசடி. சட்ட விரோதமான பொருட்கள் அல்லது கடத்தல் தொடர்பான குற்றத்தில் சிக்கி இருப்பதாக கூறி, அப்பாவிகளை அச்சுறுத்தும் வேலையில் சைபர் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர். மோசடி செய்பவர்கள் வீடியோ அழைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். மேலும் கைது அல்லது சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க உதவுவதாக கூறி பணம் கோருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களும் பயந்து பணத்தை கொடுக்கிறார்கள். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.