சென்னை: சுபமுகூர்த்த தினங்களான நவம்பர் 14, 15 தேதிகளில் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சுபமுகூர்த்த தினங்களில் பத்திரப்பதிவுகள் அதிகம் நடைபெறும் என்பதால், சுபமுகூர்த்த தினங்களான நவம்பர் 14, 15 தேதிகளில் பத்திரப்பதிவு செய்யப்படும் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஐப்பசி மாதத்தில் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முகூா்த்த நாள்கள் வருகின்றன. இவ்விரண்டு நாள்களிலும் சாா்-பதிவாளா் அலுவலகங்களில் […]