பிரதமர் நரேந்திர மோடி தற்போது மகாராஷ்டிராவில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காகத் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். புனே மாவட்டத்தில் போட்டியிடும் பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளின் 11 வேட்பாளர்களை ஆதரித்து புனேயில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு நரேந்திர மோடி உரையாற்றினார்.
அதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “காஷ்மீரில் மீண்டும் 370வது சட்டப்பிரிவு கொண்டு வரவேண்டும் என்று கூறி பாகிஸ்தானின் குரலைக் காங்கிரஸ் இங்கு ஒலிக்கிறது. மீண்டும் 370வது சட்டப்பிரிவு வருவதை நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. ஆனால் காங்கிரஸ் மீண்டும் 370வது சட்டப்பிரிவைக் கொண்டு வரவேண்டும் என்று கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
காங்கிரஸ் நாட்டை 60 ஆண்டுகளாக ஆண்டது. அப்போது ஏன் காங்கிரஸ் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை நாடு முழுவதும் அமல்படுத்தவில்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு கொள்ளையடித்து அதனை மகாராஷ்டிரா தேர்தலில் பயன்படுத்துகிறது. இந்தியாவிற்கு எதிரான சக்திகளை நிரந்தரமாகத் தோற்கடிக்க ஹரியானாவில் கொடுத்தது போன்ற ஒரு முடிவை மகாராஷ்டிரா மக்கள் பா.ஜ.க கூட்டணிக்குக் கொடுக்கவேண்டும். காங்கிரஸ் அதிகாரத்திற்கு மட்டுமே ஆசைப்படுகிறது. இதற்காகச் சாதி அடிப்படையில் மக்களைப் பிரிக்க முயற்சி செய்கிறது.
காங்கிரஸ் காலனி ஆதிக்க மனநிலையில் இருக்கிறது. ஒளரங்கசீப்பைப் புகழ விரும்பும் காங்கிரஸ் வீர் சாவர்கரை மறைக்க முயல்கிறது. மகாராஷ்டிராவில் யார் முதல்வராவது என்ற போட்டி இருக்கிறது. இதிலிருந்து அவர்களால் நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியாது என்று தெளிவாகத் தெரிகிறது” என்று கூறியுள்ளார்.
ஒரே நாளில் நரேந்திர மோடி மூன்று பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார். ஆனால் ஒரு கூட்டத்தில் கூட சரத்பவாரை விமர்சனம் செய்து மோடி பேசவில்லை. மேற்கு மகாராஷ்டிராவில் சரத்பவாருக்குச் செல்வாக்கு இருக்கிறது. சரத்பவாரை விமர்சனம் செய்து பேசினால் அங்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். கடந்த மக்களவைத் தேர்தலில் அது போன்று சரத்பவாருக்கு எதிராக நரேந்திர மோடி பேசினார். தேர்தலில் பா.ஜ.க மேற்கு மகாராஷ்டிராவில் கடுமையான சரிவைச் சந்தித்தது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY