சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னையில் உள்ள பிரபல பள்ளியான பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.80 ஆயிரம் அபராதமும் சென்னை போக்சோ நீதிமன்றம் விதித்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலக்கட்டமான கடந்த 2021ம் ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லை மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்படி, சென்னை பத்ம சேஷாத்திரி பாலபவன் சி.பி.எஸ்.இ. பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் (வயது 59) மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் […]