12 Years Of Thuppakki: “ரூ.65 லட்சம் காசோலையைக் கொடுத்து அனுப்பினார் விஜய்!'' – தாணு ஷேரிங்ஸ்!

துப்பாக்கி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவாகியிருக்கிறது.

விஜய் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் அவருடைய கரியரில் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்த முதல் திரைப்படம். இப்படம் விஜய்யின் கரியரில் ஒரு மைல்கல். `தூப்பாக்கி’, `நண்பன்’ திரைப்படங்களுக்காக விஜய்க்கு சிறந்த நடிகருக்கான ஆனந்த விகடன் சினிமா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விருதை பெற்றுக் கொள்கையில் துப்பாக்கி திரைப்படம் தொடர்பாக விஜய், “இந்தியாவில் இந்தி பேசுற மக்கள் வாழும் மாநிலங்கள்தான் அதிகம். அதனால், இந்திப் படங்களான ‘கஜினி’, ‘தபாங்’ எல்லாம் 200 கோடியைத் தாண்டுறது சாதாரணம். ஆனா, தமிழ்ப் படமான ‘துப்பாக்கி’ 100 கோடி வசூலிச்சது பெரிய விஷயம்தான். சினிமா பார்க்கிற ரசிகர்களின் எண்ணிக்கை வளர்ந் துட்டே இருக்கு. அவங்க ரசனையும் வேற பிளாட்ஃபார்முக்கு மாறிடுச்சு. அதனால இனி ரசிகர்களின் ரசனைக்கு ஏத்த மாதிரி படம் கொடுக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு. அப்படி அவங்களை ரசிக்கவெச்சா, 100 கோடி என்ன… 200 கோடியைக்கூட அள்ளிக் கொடுப்பாங்க.” எனக் கூறியிருப்பார்.

Thuppaki Vijay

தயாரிப்பாளர் தாணு ஆனந்த விகடனில் எழுதிய உண்மையை சொல்வேன் தொடரில் `துப்பாக்கி’ திரைப்படம் தொடர்பாக சிலாகித்து சில விஷயங்களை எழுதியிருப்பார். குறிப்பாக ஒரு பாடலுக்காக உதவி செய்ய முன்வந்தது குறித்து தாணு, ” ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்தது. ஒரே ஒரு பாடல் மட்டும் சுவிட்சர்லாந்தில் எடுக்க வேண்டும். எனக்கு அந்தப் பாடலுக்கான பட்ஜெட்டாக 80 லட்சம் ரூபாய் கொடுத்திருந்தார்கள். ஆனால், இறுதியாக ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் வந்தது.

நான் இயக்குநரிடம், “தம்பி, பட்ஜெட்டைத் தாண்டிப் போகுதே’’ என்றேன். “நாம ரொம்ப சிக்கனமாதான் சார் எடுக்குறோம். ஆனா, இவ்வளவு பேரை சுவிட்சர்லாந்துக்குக் கூட்டிட்டுப் போகவேண்டியிருக்கு. அதனால பட்ஜெட் அதிகமாகுது’’ என்றார். இந்த விஷயம் விஜய் தம்பியின் காதுக்குப் போகிறது. விஜய் அவருடைய உதவியாளர் ராமுவிடம் 65 லட்சம் ரூபாய் காசோலையைக் கொடுத்து என்னிடம் அனுப்புகிறார்.

Thanu

நான் ராமுவிடம், “தம்பி, என்னைத் தயாரிப்பாளரா தேர்ந்தெடுத்துட்டு அவர் செலவு பண்றது சரியா இருக்குமா? பட்ஜெட்டுக்கு மேல இருக்குன்னுதான் சொன்னேனே தவிர, பண்ணமாட்டேன்னு சொல்லல. இந்த செக்கை அப்படியே விஜய் தம்பிகிட்ட கொடுத்துடுங்க’’ என்று சொல்லி அனுப்பினேன். ‘சொன்ன பட்ஜெட்டைத் தாண்டிப் போய்விட்டது, அதனால் அந்தச் செலவை நாம் ஏற்றுக்கொள்வோம்’ என்கிற தம்பி விஜய்யின் மனதை எண்ணி நெகிழ்ந்துபோனேன். பாடலை சுவிட்சர்லாந்தில் சிறப்பாக எடுத்து முடித்தோம். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் சுவிட்சர்லாந்து போக முடியாத சூழல். அதனால் நட்டியை ஒளிப்பதிவு செய்ய அனுப்பி வைத்தேன்.” எனக் குறிப்பிட்டிருப்பார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.