2K தலைமுறையினர் வேலை செய்வதை அணுகும் விதம் பல விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அலுவலகத்தின் மீதிருக்கும் எதிர்பார்ப்புகள் இந்த தலைமுறையினருக்கு முற்றிலும் வேறுஒன்றாக இருக்கிறது என கார்பரேட் நிர்வாகங்களே புலம்புவதைப் பார்க்க முடிகிறது.
ஆயுஷி டோஷி என்ற வழக்கறிஞர், அவரின் ஜூனியர் அனுப்பிய மெஸ்ஸேஜைப் பகிர்ந்து ஒரு விவாதத்தை தொடங்கியிருக்கிறார். “வணக்கம் சார்&மேடம், இன்று மாலை 8:30 மணிக்கு அலுவகலத்தில் இருந்து புறப்படுவதனால் நாளை காலை 11:30 மணிக்குதான் அலுவலகம் வருவேன்” என அவரது ஜுனியர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அதாவது, நான் இன்று லேட்டாக கிளம்புவதால் நாளை லேட்டாகதான் வருவேன் என்கிறார்.

இந்த செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஆயுஷி, “என்னுடைய ஜூனியர் எனக்கு அனுப்பிய இந்த செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. அவர் இன்று தாமதமாக கிளம்புவதால் அதை சரி செய்ய நாளை தாமதமாக வரப்போகிறார். என்ன ஒரு சிந்தனை, என்னால் எதுவும் பேசமுடியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இளம் தலைமுறையினர் Work-life Balance குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதும் அதை நேரடியாக வெளிப்படுத்துவதும் இணையத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
“இளம் பணியாளர்கள் சொந்த வாழ்க்கை பாதிக்காமல் செயல்திறனை வெளிப்படுத்துவதில் புதிய முறைகளை எடுத்து வருகின்றனர்” என்று ஒருவர் கமண்ட் செய்துள்ளார்.
“அந்த ஊழியர் செலவழிக்கும் நேரத்துகாக நீங்கள் பணம் கொடுக்கிறீர்கள். குறிப்பிட்ட நேரத்துக்குள் உங்களை திருப்தி செய்யும் அளவு அவர் பணியாற்றவில்லை என்றால் நீங்கள் தவறான நபரைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்” என மற்றொருவர் கூறியிருக்கிறார்.

பலரும் அந்த இளம் ஊழியருக்கு ஆதரவாக கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இதனால் தனது சூழலை விளக்கி மற்றொரு ட்வீட்டை சேர்த்துள்ளார் ஆயுஷி டோஷி. “கமண்ட் செய்பவர்களுக்காக என் சூழலை விளக்குகிறேன். ஒரு முழு நாளில் முடியக்கூடிய வேலைக்காக அவருக்கு 3 டெட்லைன்கள் கொடுக்கப்பட்டன.
அவரது வேலை நேரம் 10 மணி முதல் 7 மணி வரை. அதற்குள் அவரால் வேலையை முடிக்க முடியவில்லை என்றால் அவர் கூடுதலாக ஒன்றரை மணிநேரம் செலவிட வேண்டும். பிரச்னை என்னவென்றால், அவரது நேரத்தை வேலையில் கவனம் செலுத்துவதை விட ஃபோனிலேயே செலவிடுகிறார். டெட் லைன் இருக்கும் போது சில நேரங்களில் கூடுதலாக பணியாற்ற வேண்டியதிருக்கும்.”
“நீங்கள் டெட்லைன் வழங்கும்போது, அதற்காக அவர் இழப்பீடு நேரத்தை எடுத்துக்கொள்ள அவருக்கு உரிமை உள்ளது. அவரது வேலை நேரத்தை நீட்டிக்கும்போது நுழைவு நேரத்தில் நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும்.” என்று ஒருவர் அதற்கும் பதிலளித்துள்ளார்.
I can’t believe my junior sent me this. Today’s kids are something else. He stayed late, so now he’s going to show up late to the office to “make up” for it. What a move! i am speechless mahn. pic.twitter.com/iNf629DLwq
— Adv. Ayushi Doshi (@AyushiiDoshiii) November 12, 2024
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb