கண்டி மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமுகமான முறையில் இடம்பெற்று வருவதாகவும், வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்தி தமது வாக்குகளை தாமதமின்றி உரிய நேரத்தில் பயன்படுத்துமாறும் கண்டி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சந்தன தென்னகோன் கேட்டுக்கொண்டார்.
இன்று காலை 07:00 மணிக்கு அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மாலை 04:00 மணிக்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது,
இம்முறை கண்டி மாவட்ட வாக்கெண்ணும் நிலையங்கள் பொல்கொல்லவில் அமைந்துள்ளதாக தெரிவித்த கண்டி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி, வாக்குப் பெட்டிகள் கிடைத்தவுடன் வாக்குகளை எண்ணும் பணியை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், வாக்குகளை எண்ணும் முதல் கட்டப் பணிகள் மாலை 05.30 மணியளவில் ஆரம்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்த அவர், வாக்களிப்பு நிலையங்களில் சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே, எவ்வித அச்சமும் சந்தேகமும் இன்றி காலையிலேயே தமது வாக்குகளை பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.