சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவைசிகிச்சை செய்து, வலது கை தோள்பட்டையில் வைக்கப்பட்டிருக்கும் பிளேட்டை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த மே மாதம் வைகோ, வீட்டில் வழுக்கி விழுந்ததில், அவரது வலது கை தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, எலும்புகளை […]