இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று(14) வியாழக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றது.
இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் மு. ப 10.00 மணி நிலவரப்படி 16% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருப்பதாக தெரிவத்தாட்சி அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் காலை 10.00 மணிவரை 21.52 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை 100 907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில், இதுவரை 21,715 பேர் வாக்களித்துள்ளனர்.
மேலும் இத்தேர்தல் பணியில் கிளிநொச்சி மாவட்டத்தில் 1,863 அரச உத்தியோகத்தர்கள், 396 பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் தொடர்ச்சியாக வாக்களிப்பில் பங்குபற்றிக் கொண்டிருக்கின்றமையை அவதானிக்க முடிகிறது.