Delhi : `1 ஓட்டு' வித்தியாசத்தில் மேயரான ஆம் ஆத்மி கவுன்சிலர் – பரபரப்பு தேர்தல்!

டெல்லி மாநகரக மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. ஆம் ஆத்மி தலைவர் மகேஷ் கிஞ்சிக்கும் பாஜக வேட்பாளருக்கும் இடையே நெருக்கடியான போட்டி உருவானது.

டெல்லியில் மொத்த கவுன்சிலர்கள் எண்ணிக்கை 265. மேயர் பதவியைத் தக்கவைக்க 133 வாக்குகள் பெற வேண்டியது அவசியம்.

265 வாக்குகளில் இரண்டு வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. ஆனாலும், டெல்லியின் கரோல் பர்க் அருகே உள்ள தேவ் நகர் கவுன்சிலரான மகேஷ் கிஞ்சி, சரியாக 133 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.

மகேஷ் கிஞ்சி

பாஜக வேட்பாளர் 130 வாக்குகளைப் பெற்றிருந்தார். டெல்லி மாநகராட்சியை ஆளுவதில் பாஜகவுடன் நீண்டகாலமாக மோதல் இருந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி முக்கியமானதாக கருதப்படுகிறது.

DMC (Delhi Municipal Corporation)-ன் மூன்றாவது தலித் மேயர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் மகேஷ் கிஞ்சி.

பரபரப்பான வாக்குப்பதிவு

டெல்லி மாநகாரட்சி கட்டடத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆம் ஆத்மி மற்றும் பாஜவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் வருகை தந்திருந்தனர்.

ஆம் ஆத்மி எம்.பி.க்கள் சஞ்சய் சிங் மற்றும் என்.டி.குப்தா வந்திருந்தனர். பாஜக சார்பில் டெல்லியின் 7 எம்.பிக்கள் கலந்துகொண்டனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்

வாக்குப்பதிவு அன்று காங்கிரஸ் கவுன்சிலர் சபீலா பேகம் வாக்களிக்கப்போவதில்லை எனக் கூறி தனது பதவியைத் துறந்தார். ஆம் ஆத்மி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டியிருந்ததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியிருக்கிறார். ஆனாலும் இந்த நடவடிக்கை ஆம் ஆத்மி வேட்பாளரின் வெற்றியை தடுக்கவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய டெல்லி மேயர் தேர்தல், தாமதமாக நடைபெற்றிருப்பதனால் மேயரின் பதவிக்காலம் அதற்கேற்றபடி குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மகேஷ் கிஞ்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.