Mrunal Thakur: “இப்போது எனக்காகவும் கதைகள் எழுதுகிறார்கள்!'' – நெகிழும் மிருணாள் தாக்கூர்

`சீதா ராமம்’ படம் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர்.

இந்தப் படத்தின் வெற்றி அடுத்தடுத்த படவாய்ப்புகளை உருவாக்கித் தர, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ‘ஹாய் நான்னா’, ‘ஃபேமிலி ஸ்டார்’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்காகக் கதைகள் எழுதப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

மிருணாள் தாக்கூர்

இதுதொடர்பாக பேசிய அவர், ” ‘சீதாராமம்’, ‘ஹாய் நான்னா’ படங்களுக்குப் பிறகு எனக்கு அதிக வாய்ப்புகள் வருகின்றன. இந்தப் படங்கள் என் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது. அது எனது பொறுப்பையும் கூட்டியிருக்கிறது. அதனால் ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. அவர்களைக் கவரும் வகையிலான படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.

இப்போது எனக்காகவும் கதைகள் எழுதுகிறார்கள். அதனை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமாவில் எனது பயணம் ஏணியில் ஏறுவது போலதான். ஒவ்வொரு படியாக ஏறிக்கொண்டிருக்கிறேன். இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளுக்குள் அடங்கிவிடாமல் ஆனால் நான் மலையாளம், பஞ்சாபி உட்பட பல்வேறு மொழிகளிலும் நடிக்க விரும்புகிறேன்.

மிருணாள் தாக்கூர்

பிரெஞ்சு, ஸ்பானிஷ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தால் கூட அதனை ஏற்று நடிப்பேன்” என்று மிருணாள் தாக்கூர் கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.