RCB New Captain | அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான எதிர்பார்ப்பு இப்போதே தொடங்கிவிட்டது. ஐபிஎல் 2025 தொடருக்கான ஏலம் வரும் நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் மிகப் பிரம்மாண்டமாக நடக்கிறது. 10 அணிகளும் ஸ்டார் பிளேயர்களை தூக்குவதற்கு அதிரடி பிளான்களை போட்டு ரெடியாகிவிட்டனர். இன்னும் ஒருமுறை கூட ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (Royal Challengers Bangalore) அணி இம்முறை சரியான பிளேயர்களை ஏலத்தில் டார்க்கெட் செய்ய வேண்டும் என்ற முடிவில் ஒருசில பிளேயர்களை டார்கெட் செய்து வைத்திருக்கிறது.
இந்த முறை ஆர்சிபி அணிக்கு புதிய கேப்டன்
கேப்டனாக இருந்த பாப் டூபிளசிஸ் ஆர்சிபி அணியில் இருந்து விடுக்கப்பட்டிருக்கிறார். அதனால் ஆர்சிபி அணிக்கு புதிய கேப்டன் வருவது உறுதி. விராட் கோலி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் ஒரு புதிய பிளேயரை ஆர்சிபி அணி ஏலத்தில் எடுக்க இருப்பதாகவும், அவரை கேப்டனாக நியமிக்க முடிவு செய்திருபதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அந்த அணிக்காக ஆடிய கிளென் மேக்ஸ்வெல் மீண்டும் ஏலத்தில் ஆர்சிபி அணி எடுத்தாலும், அவரை கேப்டனாக நியமிக்கும் எண்ணம் அந்த அணிக்கு இல்லை. ஆர்சிபி (RCB) அணியின் டார்க்கெட்டில் இருக்கும் பிளேயர் ஏற்கனவே இன்னொரு அணிக்கு கேப்டனாக இருந்து ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தவர். அதுவும் 2016 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் தான் அந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஆர்சிபி அணிக்கு வரும் ஆஸி பிளேயர்
அந்த பிளேயர் டேவிட் வார்னர். இவர் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும்போது தான், 2016 ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியை வீழ்த்தி அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது. இம்முறை ஐபிஎல் ஏலத்துக்கு வரும் டேவிட் வார்னரை (David Warner) ஆர்சிபி அணி டார்க்கெட் செய்ய முடிவெடுத்திருக்கிறது. இவரை ஏலம் எடுத்து புதிய கேப்டனாக நியமிக்கவும் முடிவு செய்திருக்கிறது. இது குறித்து விராட் கோலி உடன் அந்த அணி நிர்வாகம் ஆலோசனை நடத்தியிருக்கிறது. சிலர் விராட் கோலியே மீண்டும் கேப்டனாக இருக்கட்டும் என தெரிவித்த நிலையில், ஐபிஎல் 2025 ஏலம் முடிந்த பிறகு முடிவெடுக்கலாம் என இந்த விவகாரத்தை ஒத்தி வைத்திருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
ஆர்சிபி அணி ரீட்டெயின் பிளேயர்கள்
ஆர்சிபி அணி நான்கு பிளேயர்களை ரீட்டெயின் செய்திருக்கிறது. விராட் கோலி (ரூ. 21 கோடி), ரஜத் படிதார் (ரூ. 11 கோடி), யாஷ் தயாள் (ரூ. 5 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. இப்போது அந்த அணி வசம் ரூ.83 கோடி உள்ளது. ஏலத்தில் நிச்சயம் கேஎல் ராகுல், ரிஷப் பந்த், வார்னர் உள்ளிட்ட பெரிய பிளேயர்களை அந்த அணி டார்க்கெட் செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது.