சென்னை; நஷ்டத்தில் இயக்கும் தமிழ்நாடு போக்குவரத்து துறையில் தீபாவளி சிறப்பு பேருந்துகளால் மேலும் ரூ.50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிலாளர் யூனியன் குற்றம் சாட்டி உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலங்களில், பொதுமக்களின் வசதிக்காக அரசு பேருந்துகள் மட்டுமின்றி, தனியார் பேருந்துகளையும் வாடகைக்கு எடுத்து இயக்கியதால், அரசுக்கு ரூ.50 கோடி இழப்பு போக்குவரத்து துறை தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழக அரசு போக்குவரத்து கழகம் தினமும் ரூ.15 கோடி நஷ்டத்தை சந்தித்து […]