கோவை: ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரம் தயாரித்து ரூ.75 லட்சம் மதிப்பிலான நிலம் மோசடி செய்த விவகாரத்தில் இரண்டு பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பையும், அதிர்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் அரசு நிலங்கள், நீர் நிலைகள், கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், நத்தம் நிலகள் போன்றவை ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் சூறையாடப்பட்டு வருகின்றன. பல இடங்களில் போலி பட்டா போட்டு விற்பனைகள் செய்யப்பட்டுள்ளதும், இந்த விவகாரம் வெளியே தெரிந்ததும், […]