ஓராண்டுக்கும் மேல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் திடீர் அரசியல் மாற்றமாக பாஜக கூட்டணியில் இருந்து கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய மக்கள் கட்சி பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு எழுதிய கடிதத்தில் மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக, நிலைமை மோசமாகி வருவதையும், ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழப்பதையும், மாநில மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாவதையும் […]