அதிக லாபம், அதிக ரிஸ்க்… செக்டார் ரொட்டேஷன் ஃபண்ட்… ஶ்ரீராம் எம்.எஃப்-ன் புதிய என்.எஃப்.ஒ…!

பொதுவாக, செக்டார் ஃபண்டுகள் அதிக ரிஸ்க் கொண்டவையாகக் கருதப்படுகின்றன. காரணம், இந்த வகை ஃபண்ட் திட்டங்களில் ஒருவர் எப்போது முதலீடு செய்ய வேண்டும், எப்போது முதலீட்டைத் திரும்ப எடுக்க வேண்டும் என்பதைக் கணிப்பது கடினம். செக்டார் ஃபண்டுகள் தொடர்பான அடிப்படை புரிதல் இல்லாத முதலீட்டாளர்கள், ஒரு குறிப்பிட்ட செக்டார் ஃபண்ட் ட்ரெண்டின் உச்சத்தில் இருக்கும்போது முதலீடு செய்கிறார்கள். பிற்பாடு, அந்த செக்டார் டிரெண்டிங்கில் இருந்து விலகி, சோபை இழக்கத் தொடங்கியவுடன், ‘அய்யோ, நஷ்டம் வந்துவிட்டதே’ என்று வருத்தப்படுகிறார்கள்.

முதலீட்டாளரின் இந்தக் கவலைக்குத் தீர்வு சொல்லும் விதமாக சென்னையைச் சேர்ந்த ஶ்ரீராம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தற்போது மல்ட்டி செக்டார் ரொட்டேஷன் ஃபண்ட் என்கிற புதிய ஃபண்ட் திட்டத்தை வெளியிட்டிருக்கிறது. இந்தப் புதிய ஃபண்ட் வெளியீட்டுத் திட்டத்தில் (NFO) இந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி வரை முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்வதற்கு மிகக் குறைந்த தொகை ரூ.500 ஆகும்! இது ஒரு ஓப்பன் எண்டெட் ஃபண்ட் திட்டம் என்பதால், இதில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யத் தொடங்கலாம். எப்போது வேண்டுமானாலும் முதலீட்டைத் திரும்பப் பெறலாம்!

NFO

இந்தப் புதிய ஃபண்ட் திட்டம் வெளியீடு தொடர்பாக சென்னைக்கு வந்திருந்தனர் ஶ்ரீராம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் எம்.டி மற்றும் சி.இ.ஒ கார்த்திக் ஜெயின் மற்றும் ஃபண்ட் மேனேஜர் தீபக் ராமராஜு. இந்தப் புதிய ஃபண்ட் திட்டம் பற்றி இருவரும் நாணயம் விகடனுக்குச் சிறப்புப் பேட்டி அளித்தனர். முதலில் பேசிய கார்த்திக் ஜெயின் ஶ்ரீராம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பற்றி நம்மிடம் எடுத்துச் சொன்னார்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நிறுவனம்..

‘‘ஶ்ரீராம் நிறுவனம் நிதித் துறையில் இந்தியாவின் மிகப் பெரும் நிறுவனம் ஆகும். வாகனக் கடன் உள்பட பல்வேறு செயல்பாடுகளைச் செய்துவரும் ஶ்ரீராம் நிறுவனம், 30 ஆண்டுகளுக்கு முன்பே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைத் தொடங்கியது. அது மட்டுமல்லாமல், அதை பங்குச் சந்தையிலும் பட்டியலிட்டது. அந்த வகையில், இந்தியாவில் பங்குச் சந்தையில் பட்டியலான முதல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஶ்ரீராம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்தான்.

ஆனால், பல்வேறு காரணங்களினால் இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸைப் பெரிய அளவில் செய்யாமலே இருந்தது. இந்த நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸைப் பெரிய அளவில் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்துடன் கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

கார்த்திக் ஜெயின்

ஶ்ரீராம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் கடன் சந்தை சார்ந்த திட்டங்கள் 3, ஹைபிரிட் திட்டங்கள் 3, பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள் 3 என மொத்தம் 9 திட்டங்கள் உள்ளன. இந்த நிறுவனம் நிர்வகிக்கும் சொத்தும் மதிப்பு (AUM) 1000 கோடி ரூபாய் என்கிற அளவில் இருக்கிறது’’ என்றவர் இந்தியாவில் செக்டோரல் ஃபண்ட் திட்டங்களின் வளர்ச்சி பற்றி அடுத்து பேசினார்.

ஶ்ரீராம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வெளியிடும் மல்ட்டி செக்டோரல் ஃபண்ட் திட்டம் புதுமையானதொரு ஃபண்ட் திட்டமாகும். இதில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். குறிப்பாக, அதிக ரிஸ்க் எடுத்தாலும் அதிக லாபம் பார்க்க நினைக்கும் இளைஞர்கள் நிறையவே முதலீடு செய்யலாம். ஒரு குறிப்பிட்ட செக்டார் ஃபண்டில் முதலீடு செய்யத் தயங்கும் முதலீட்டாளர்கள்கூட இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் பல்வேறு செக்டார்களின் கிடைக்கும் நன்மைகளைப் பெறுவதன் மூலம் ஓரளவு நல்ல லாபம் பார்க்க முடியும். பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருக்கும் இந்தக் கட்டத்தில் இந்த ஃபண்டுக்கு முதலீட்டாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார் கார்த்திக் ஜெயின்.

தீபக் ராமராஜு

ஐ.டி செக்டார் ஃபண்டுகள்…

அடுத்து பேசிய ஃபண்ட் மேனேஜர் தீபக் ராமராஜு ஶ்ரீராம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வெளியிடும் புதிய ஃபண்ட் திட்டம் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

‘‘செக்டோரல் ஃபண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்னை, ஒரு செக்டார் ஃபண்டில் முதலீடு செய்ய சரியான நேரம் எது, முதலீடு செய்து நல்ல லாபம் பார்த்தபின் முதலீட்டைத் திரும்ப எடுக்க சரியான நேரம் என்பதைக் கண்டறிவதுதான். உதாரணமாக, ஐ.டி செக்டார் துறை பங்குகள் 2012 செப்டம்பரில் ஏற்றம் காணத் தொடங்கின. இதுதான் ஐ.டி செக்டார் ஃபண்டில் முதலீடு செய்ய சரியான நேரம். இந்த நேரத்தில் ஐ.டி செக்டார் ஃபண்டில் முதலீடு செய்து, 2015 மார்ச் வரை அதில் முதலீட்டைத் தொடர்ந்திருந்தால், 39% லாபம் கிடைத்திருக்கும்.

ஐ.டி துறை சுழற்சி

ஆனால், 2015-க்குப்பிறகு ஐ.டி செக்டார் சோபை இழந்து, இறக்கம் காணத் தொடங்கியது. 2015 முதல் 2017 டிசம்பர் வரையிலான காலத்தில் இந்த செக்டார் ஃபண்டுகள் எந்த லாபத்தையும் தராமல், 4% நஷ்டத்தையே தந்தன.

ஆனால், கோவிட்டுக்குப் பிறகு 2020 ஏப்ரலில் மீண்டும் உயரத் தொடங்கிய ஐ.டி செக்டார் ஃபண்டுகள், 2021 டிசம்பர் வரையிலான காலத்தில் 90% வருமானத்தைத் தந்தது. ஆனால், அதன்பிறகு மீண்டும் இறக்கம் காணத் தொடங்கி 2022 பிப்ரவரி முதல் 2024 ஜூன் வரை எந்த லாபத்தையும் அளிக்காமல், 5% நஷ்டத்தையே அளித்திருக்கிறது.

ஐ.டி துறை சுழற்சி

ஒரு செக்டாரில் இருந்து இன்னொரு செக்டாருக்கு…

2019 டிசம்பரில் எஃப்.எம்.சி.ஜி செக்டார் ஃபண்டுகள் நன்கு செயல்படத் தொடங்கி, 2022 மார்ச் வரை இந்த ஃபண்டுகள் நல்ல வருமானத்தைத் தந்தன. இதே காலகட்டத்தில் ஐ.டி செக்டார் ஃபண்டுகளின் செயல்பாடும் நன்றாகவே இருந்தன. ஆனால், 2022 மார்ச்சில் ஐ.டி செக்டார் ஃபண்டுகளின் செயல்பாடு கீழே இறங்கத் தொடங்கியது. ஆனால், எஃப்.எம்.சி.ஜி ஃபண்டுகளின் செயல்பாடு 2024 ஜூன் வரை நல்ல விதமாக இருந்தது. இப்படி ஒரு செக்டார் இறக்கம் காணத் தொடங்கி, இன்னொரு செக்டார் விலையேற்றம் கண்டுவரும்போது, அந்த செக்டாருக்கு முதலீட்டை மாற்றிவிடுவோம்.

எஃப்.எம்.சி.ஜி துறை சுழற்சி

எனவே, ஒரு செக்டார் ஃபண்ட் திட்டம் நன்கு செயல்படுகிறதா என்பதை நன்கு தெரிந்துகொண்டபிறகுதான் அதில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், ஒரு சாதாரண முதலீட்டாளரால் இதை சரியாக செய்ய முடியுமா என்பது பெரிய கேள்வி. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு தரும் விதமாகத்தான் நாங்கள் இப்போது மல்ட்டி செக்டோரல் ஃபண்ட் திட்டத்தை வெளியிடுகிறோம்.

கடந்த 30 ஆண்டுகளில் ஒவ்வொரு செக்டாரும் எப்படி செயல்பட்டிருக்கிறது என்பதை நாங்கள் ஆய்வு செய்ததன் மூலமாக இனிவரும் காலத்தில் ஒவ்வொரு செக்டாரும் எப்படி செயல்பட வாய்ப்புள்ளன என்பதைக் கணிக்கும் அணுகுமுறை எங்களிடம் இருக்கிறது. எந்த செக்டார் எப்போது நன்கு செயல்படத் தொடங்குகிறது என்பதை அறிந்து, அதில் முதலீடு செய்து, எப்போது விலையிறக்கம் காணத் தொடங்குகிறது என்பதைக் கண்டுபிடித்து, அதிலிருந்து வெளியேறி, நன்கு செயல்படத் தொடங்கிய வேறொரு ஃபண்டில் முதலீடு செய்வோம். இப்படி செய்வதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை எங்களால் தரமுடியும் என்று நம்புகிறோம்.

3 முதல் 6 செக்டார்களில்…

பிசினஸில் பல வகையான செக்டார்கள் இருந்தாலும், 3 முதல் 6 வகையான செக்டார்களை மட்டுமே நாங்கள் கருத்தில் கொண்டு செயல்படப் போகிறோம். இதனால் டைவர்சிஃபைட்-ஆக எங்களால் முதலீட்டை வைத்திருக்க முடியும். மேலும், டிரெண்டிங்கில் இருக்கும் செக்டார்களில் மட்டுமே எங்கள் முதலீடு இருக்கும். இதனால், லாபம் தராத நிலையில் செக்டார் ஃபண்டுகளில் இருந்து எங்களால் எளிதில் வெளியேற முடியும். எந்த செக்டாரில் முதலீடு செய்ய வேண்டும் என்பதைக் கணிக்கும்போது ‘டாப் டவுன்’ அணுகுறையில் நாங்கள் செயல்படுவோம். ஆனால், ஒரு குறிப்பிட்ட செக்டாரில் பங்குகளைத் தேர்வு செய்யும்போது ‘பாட்டம் அப்’ அணுகுமுறையை நாங்கள் மேற்கொள்வோம்.

இந்த வகை ஃபண்டில் இருக்கும் இன்னொரு முக்கியமான சிறப்பு, ஃபண்ட் மேனேஜர் ஒரு ஃபண்டில் உள்ள முதலீட்டை எடுத்து இன்னொரு ஃபண்டில் முதலீடு செய்யும்போது, மூலதன ஆதாய வரி கட்டத் தேவையில்லை. இதனால் முதலீட்டாளர்கள் அதிக வரி கட்ட வேண்டியிருக்காது.

Asset Allocation

இந்த ஃபண்ட் திட்டத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் பணத்தில் 80 சதவிகிதத்தை செக்டார் சார்ந்த ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வோம். மீதமுள்ள 20% பணத்தை பங்குச் சந்தை சார்ந்த வேறு பங்குகளில் முதலீடு செய்வோம்’’ என்றார்.

அசெட் அலோகேஷன் முறையில்…

செக்டார் ஃபண்டுகள் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், அந்த வகை் திட்டங்களில் முதலீடு செய்து ஓரளவு லாபம் பார்க்க நினைக்கும் முதலீட்டாளர்கள் இந்தப் புதிய ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வது குறித்து நன்கு ஆராயலாம். இந்த ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய நினைக்கும்பட்சத்தில், அசெட் அலோகேஷன் முறையில் ஒரு குறிப்பிட்ட விகிதம் அளவுக்கான பணத்தை முதலீடு செய்வது நல்லது. இந்த ஃபண்ட் திட்டம் அடுத்த சில ஆண்டுகளில் எப்படி செயல்படுகிறது என்பதை நன்கு தெரிந்துகொண்டபின், இந்த ஃபண்ட் திட்டத்தில் முதலீட்டை அதிகரிக்க யோசிக்கத் தொடங்கலாம்!

Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.

General Disclaimer and Terms & Conditions of the research report

INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)

முதலீடு செய்வதற்குமுன், செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைசரிடம் கலந்தாலோசிக்க முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் வாங்குவது லாபகரமாக இருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.