புதுடெல்லி: மத்திய-மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் வரவு, செலவுக் கணக்குகளை தணிக்கை செய்ய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட அதிகார அமைப்பு தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் (சிஏஜி) ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16-ம் தேதி தணிக்கை தினம் கொண்டாடப்படுகிறது. நேற்று டெல்லியுள்ள சிஏஜி அலுவலகத்தில் தணிக்கை தினம் கொண்டாடப்பட்டது. அப்போது இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் கிரிஷ் சந்திர முர்மு பேசுகையில், தணிக்கைத் துறையினர் நவீன தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக் கொண்டு புதிய கோணத்தில் சிந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.