அமராவதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜோ பைடனைப் போல பிரதமர் மோடி நினைவிழந்து வருவதாக கூறி உள்ளார். நேற்று மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமராவதி நகரில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ”மாநில அரசுகளின் வேட்பாளர்களை காசு கொடுத்து வாங்கி அரசைக் கவிழ்ப்பதற்கும், பெரும் தொழிலதிபர்களின் 16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்வதற்கும் மத்திய அரசுக்கு உரிமை இருப்பதாக அரசியல் சட்டத்தின் எந்த இடத்திலும் எழுதப்படவில்லை. அரசியலமைப்பை நாட்டின் மரபணுவாக […]