வாட்ஸ்-ஆப்பில் திருமண பத்திரிகை வந்தால் நம்ப வேண்டாம்!! அதிர்ச்சியூட்டும் பெரிய மோசடி..

New Scam Alert On Whatsapp : வாட்ஸ் ஆப் பயணாளர்கள், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர். ஒருவர் புதிதாக செல்பாேன் வாங்குகிறார் என்றால், அவர் முதலில் இன்ஸ்டால் செய்யும் செயலியாக இருக்கிறது, வாட்ஸ்-ஆப். பலரையும் நொடிப்பொழுதில் கனெக்ட் செய்யும் இந்த செயலியை, இந்திய அளவில் லட்சக்கணக்காணோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த டிஜிட்டல் யுகத்தில், போன் கால்கள், குறுஞ்செய்திகள், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பல விஷயங்கள் மூலம் மோசடிகள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு மோசடி குறித்து இங்கு பார்ப்போம்.

வாட்ஸ் ஆப்பில் நூதன மோசடி:

சமீப காலமாக, வாட்ஸ் ஆப்பில் நடைபெறும் நூதன மோசடி குறித்த விவரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதை கேள்விபட்டவர்கள், “இதுக்குன்னே தனியா டிரைனிங் எடுத்துட்டு வருவாங்க போல” என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த மோசடி, தற்போது திருமண பத்திரிகை வடிவில் ஆரம்பித்திருக்கிறது.

தற்போதைய காலக்கட்டத்தில், பலர் நேரில் சென்று யாருக்கும் பத்திரிகைகளை அனைவருக்கும் சென்று வைக்க நேரம் கிடைப்பதில்லை. இதனால், கொஞ்சம் தூரத்து உறவினர்களுக்கு, அதிகம் பரீட்சியம் இல்லாத நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப்பிலேயே இன்விட்டேஷன்களை அனுப்பி விடுகின்றனர். இதே வடிவில்தான் தற்போது ஒரு மோசடி நடைப்பெற்று வருகிறது. 

இந்த மோசடிகளை செய்யும் ஹேக்கர்கள், தாங்கள் டார்கெட் செய்பவர்களுக்கு வாட்ஸ்-ஆப்பில் திருமண அழைப்பிதழ் வடிவில் ஒரு PDF அல்லது APK டாக்குமெண்டை அனுபுக்கின்றனர். இந்த டாக்குமெண்டை, திருமண பத்திரிகை என நினைத்து சிலர் அதை டவுன்லோட் செய்கின்றனர். ஆனால், அது திருமண பத்திரிகையாகவே இருக்காது. அவர்களின் போனில் தீம்பொருளை (malware) பதிவிறக்கம் செய்து விடும். இந்த ஆப்ஷனை பயன்படுத்திக்கொண்டு அந்த ஹேக்கர்கள் தகவல்களை திருடிக்கொள்வர். 

தொலைப்பேசி எண்கள், வங்கி கணக்கு குறித்த தகவல்கள், தனிப்பட்ட புகைப்படங்கள் என எதை வேண்டுமானாலும் திருடிக்கொள்ள அவர்களுக்கு Access கொடுக்கப்படுகிறது. இதை பணம் திருட மட்டுமல்ல, உங்கள் பெயர் உள்ளிட்ட சில விவரங்களையும் பயன்படுத்தி அந்த ஹேக்கர்கள் பிளாக் மார்கெட்டில் விற்றுவிடலாம். 

என்ன செய்ய வேண்டும்?

இப்படி மோசடியில் ஈடுபடுபவர்கள், உங்கள் contact-ல் இருப்பவர்களாக இருக்க மாட்டார்கள். ஏதேனும் வெளிநாட்டு எண் அல்லது தெரியாத எண்ணில் இருந்துதான் உங்களை தொடர்பு கொள்வார்கள். அப்படி சந்தேகத்திற்குறிய எண்ணில் இருந்து திருமண அழைப்பிதழ் வடிவில் ஏதேனும் வந்தால், உடனடியாக 1930 என்ற தேசிய சைபர் கிரைம் ஹெல்ப்லைன் நம்பரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.