பல்லேகலே,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் கடந்த 13-ம் தேதி தொடங்கியது . முதலாவது ஒருநாள் போட்டி தம்புல்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் 45 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது . இந்த வெற்றியால் ஒருநாள் தொடரில் 1-0 என இலங்கை முன்னிலை வகிக்கிறது .இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி பல்லேகலேவில் இன்று நடைபெறுகிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. மழை காரணமாக போட்டி ஓவர்களாக குறைக்கப்பட்டது.
தொடக்கம் முதல் நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் மார்க் சாப்மேன் சிறப்பாக விளையாடி 76 ரன்கள் எடுத்தார். மிட்ச் ஹே 49 ரன்கள் எடுத்தார். இறுதியில் 45.1 ஓவர்களில் 209 ரன்களுக்கு நியூசிலாந்து ஆட்டமிழந்தது . இலங்கை அணியில் அபாரமாக பந்துவீசி வாண்டர்சே , தீக்சனா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 210 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது .