இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன்கள் என்பது ஆடம்பர பொருள் என்ற நிலையில் இருந்து அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. பட்ஜெட் போன் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகமாக இருந்தாலும், இஎம்ஐ கடன் வசதி கிடைப்பதால், எளிய மற்றும் நடுத்தர மக்களும், பிரீமியம் போன்கள் பக்கமாக தங்கள் பார்வையை அதிகமாக திருப்பி வருகின்றனர். அந்த வகையில் ஐபோன் என்பது பலர் வாங்க நினைக்கும் பிரீமியம் ஃபோன்களில் ஒன்று.
ஐபோன் வாங்கும் கனவு உங்களுக்கு இருந்தால், அதை நிறைவேற்ற மிக நல்ல சான்ஸ் இப்போது வந்திருக்கிறது. ஐபோன் 15 மாடல் மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். பிளிப்கார்ட் (Flipkart ) தளத்தில், Flipkart Mobiles Bonanza என்னும் சலுகை விற்பனையில், பல மொபைல் போன்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகை விற்பனை நவம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும். இந்த சலுகை விற்பனையில், iPhone 15, OnePlus 12, Poco X6, Moto G85, Nothing Phone 1 மற்றும் Samsung Galaxy S23 போன்ற பல ப்ரீமியம் போன்களை மலிவான விலையில் பெறலாம்.
iPhone 15 போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விபரம்
பிளீப்கார்ட் தளத்தில், iPhone 15 என்னும் ப்ரீமியம் போன் ரூ.57,749க்கு கிடைக்கும். இந்த விலை 128ஜிபி சேமிப்பு கொண்ட மாடலுக்கானது. உண்மையில், இந்த போனின் விலை ரூ. 69,900, ஆனால் இது பிளிப்கார்ட்டில் ரூ.12,151 தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது
OnePlus 12 போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விபரம்
ஆப்பிளின் புதிய ஐபோன் 16 ஐ நீங்கள் வாங்க விரும்பினால், நீங்கள் ரூ.79,900 செலவழிக்க வேண்டும். ஆனால் நீங்கள் HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் EMI கடன் வசதியில் வாங்கினால், உங்களுக்கு ரூ. 5,000 தள்ளுபடி கிடைக்கும்.
சாம்சங் போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விபரம்
சாம்சங் கேலக்ஸி எஸ்23 போனின் விலை ரூ.41,999 மற்றும் கேலக்ஸி எஸ்24 மாடலின் விலை ரூ.59,145. ஒன் பிளஸ் 12 மாடலின் அசல் விலை ரூ.64,999. ஆனால் பிளிப்கார்டின் சலுகை விற்பனையில் ரூ.5,115 தள்ளுபடி கிடைக்கிறது.
Poco போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விபரம்
Poco X6 போனின் விலையும் குறைந்துள்ளது. முன்னதாக இதன் விலை ரூ.21,999 ஆக இருந்தது, தற்போது ரூ.18,999க்கு கிடைக்கிறது. Moto G85 இன் விலை ரூ. 17,999, ஆனால் நீங்கள் HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் EMI கடன் வசதியில் வாங்கினால், உங்களுக்கு ரூ.1,200 தள்ளுபடி கிடைக்கும். அதாவது ரூ.16,799க்கு போன் கிடைக்கும்.
நத்திங் போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விபரம்
நத்திங் ஃபோன் (1) விலை குறைந்துள்ளது. முன்னதாக இதன் விலை ரூ.15,999 ஆக இருந்தது, தற்போது ரூ.14,999க்கு கிடைக்கிறது. நத்திங் ஃபோனின் (2) அசல் விலை ரூ.44,999, ஆனால் இது பிளிப்கார்ட்டில் ரூ.36,999க்கு கிடைக்கிறது. அதாவது ரூ.8,000 தள்ளுபடி கிடைக்கும். மேலும் பல போன்கள் Flipkart இல் குறைந்த விலையில் கிடைக்கின்றன. Flipkart இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இந்த சலுகைகளை பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறலாம்.