சென்னை மெரினா லூப் சாலையின் தெற்கு பகுதியில் உணவு வளாகம் மற்றும் மீன் சந்தை அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் வார்டு உறுப்பினர் ஏற்கனவே கருத்து தெரிவித்த நிலையில் தற்போது அந்தப் பகுதியில் இதுகுறித்த பேச்சு தீவிரமாக எழுந்துள்ளது. லூப் சாலையில் நொச்சிக்குப்பம் அருகே தற்போது புதிதாக அமைக்கப்பட்ட மீன் அங்காடி கடந்த மாதம் முதல் செயல்பட துவங்கியுள்ளது. இருந்தபோதும், பட்டினப்பாக்கம் மற்றும் ஸ்ரீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த மீன் […]