ரோஹித் மற்றும் கில் இல்லை! முதல் டெஸ்ட்டிற்கான இந்தியாவின் பிளேயிங் 11 இதுதான்!

வரும் நவம்பர் 22 ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் தொடர் தொடங்குகிறது. மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கடைசியாக 2020-21 ஆம் ஆண்டு நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் அஜிங்கிய ரகானே தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியவை தோற்கடித்து வெற்றி பெற்றது. அதற்கு முன் நடைபெற்ற 2018-19 தொடரிலும் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியாவை இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. 

இருப்பினும் இந்தியாவின் சமீபத்திய ஆட்டங்கள் நம்பிக்கை அளிக்கவில்லை. காரணம் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் இழந்து இருந்தது. எனவே லார்ட்ஸில் நடக்கும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கு இந்திய அணி நேரடியாக தகுதி பெற இந்தத் தொடரில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும். இப்படி ஒரு இக்கட்டான நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் டெஸ்டில் இருந்து விலகி உள்ளார். மேலும் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷுப்மான் கில் முதல் டெஸ்தடில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. ரோஹித் சர்மா இல்லாததால் பும்ரா முதல் டெஸ்டிற்கு கேப்டனாக செயல்படுவார். 

இதற்கு முன்பு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியிலும், 2023 ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்தி இருந்தது. அதே உற்சாகத்துடன் இந்த தொடரை எதிர் கொள்ள உள்ளனர். ஆஸ்திரேலியா மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அதற்கேற்றபடி வீரர்களை தயார் செய்து வளர்கிறது ஆஸ்திரேலியா நிர்வாகம்.

இந்தியாவின் உத்ததேச பிளேயிங் 11

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா (C), முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவின் உத்ததேச பிளேயிங் 11

நாதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், அலெக்ஸ் கேரி, மிட்ச் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், நடன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி

ரோஹித் சர்மா (C), ஜஸ்பிரித் பும்ரா (WC), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த் (WK), சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (WK), ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் , ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், தேவ்தத் படிக்கல்

கூடுதல் வீரர்கள்: முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது

முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி

பாட் கம்மின்ஸ் (C), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்

இந்தியா vs ஆஸ்திரேலியா: முழு அட்டவணை

1வது டெஸ்ட்: நவம்பர் 22, பெர்த் (காலை 7:50 மணி)

2வது டெஸ்ட்: டிசம்பர் 6, அடிலெய்டு (பகல்-இரவு, காலை 9:30 மணி)

3வது டெஸ்ட்: டிசம்பர் 14, பிரிஸ்பேன் (காலை 5:50 மணி)

4வது டெஸ்ட்: டிசம்பர் 26, மெல்போர்ன் பாக்சிங் டே (காலை 5:00 மணி)

5வது டெஸ்ட்: ஜனவரி 3, சிட்னி (காலை 5:00 மணி)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.