Arun Vijay: “அஜித்துக்கும் எனக்கும் போட்டியா?'' – நடிகர் அருண் விஜய் அளித்த பதில் இதுதான்!

இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘வணங்கான்’.

இத்திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின், சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று அருண் விஜய் தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளை ஒட்டி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்திருக்கிறார்.

அருண் விஜய்- பாலா

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அருண் விஜய், “இன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு ‘வணங்கான்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயமாக ‘வணங்கான்’ திரைப்படம் என்னுடைய கரியரில் மிகவும் முக்கியமான ஒரு திரைப்படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. பாலா சாருக்கு நன்றி.

ஒரு நடிகரா என்னை வேறு பரிணாமத்தில் இப்படம் காட்டும். இந்தப் படத்தில் நான் கஷ்டப்படவில்லை. இஷ்டப்பட்டுதான் எல்லா விஷயங்களையும் செய்தேன். பாலா சாருடன் இனணந்து பணியாற்றியது எனக்கு நல்ல அனுபவமாகத்தான் இருந்தது. ரசிகர்களுக்கும் இத்திரைப்படம் சிறந்த படமாக இருக்கும்” என்றார்.

அருண் விஜய்

இதனைத்தொடர்ந்து அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. அஜித் சாருக்கும், உங்களுக்கும் போட்டி இருக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அஜித் சார் உச்சம். அவருக்கும் யாரும் போட்டி கிடையாது. அவருடைய ரசிகர்களும் என்னை நேசித்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக போட்டி எதுவும் கிடையாது” என்று பேசியிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.