இலங்கை பொலிஸ் சேவை அரசியல் மயமாக்கமின்றி பொதுமக்கள் சேவையாக மாற்றப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர்
இலங்கை பொலிஸ் சேவையை அரசியல் மயமாக்கமின்றி மக்கள் சேவையாக மாற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க வின் அபிலாசைகளுக்கு ஏற்றவாறு இலங்கை பொலிஸ் சேவையை மேலும் முன்னேற்றுவதாக, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராகத் தனது கடமைகளை நேற்று (19) பத்தரமுல்லை, சுகுருபாய கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் பொறுப்பேற்ற போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
தேர்தலுக்கு முன்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு இணங்க சட்டத்தின் ஆட்சி, நீதி, நியாயமும் நிலைநாட்டப்படும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.