கூகுள் குரோமுக்கு பெரிய ஆப்பு… இந்த 4 பிரௌசர்களையும் தெரிஞ்சிக்கோங்க – பின்னாடி கைக்கொடுக்கும்!

Alternate Browsers For Google Chrome: உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக ஏகபோகத்தை செலுத்தி வருவதாக கூகுளின் குரோம் பிரௌசர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. காரணம், கூகுள் குரோம் பிரௌசரைதான் பெரும்பாலான பயனர்கள் பயன்படுத்துகின்றனர். எனவே, மற்ற நிறுவனங்களின் மீதும் கூகுள் குரோம் அதன் ஆதிக்கத்தை செலுத்துவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், கூகுள் அதன் குரோம் பிரௌசரை கட்டாயமாக விற்கும்படி அமெரிக்க நீதித்துறை (DoJ) அதிகாரிகள் நீதிபதியிடம் கோரிக்கை வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குரோம் பிரௌசரை விற்கவும், செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆண்ட்ராய்டில் ஸ்மார்ட்போனில் கூகுள் குரோமின் இயங்குதளம் தொடர்பாக புதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதியிடம் கோரிக்கை எழுப்ப அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாற்று பிரௌசர்கள்

தற்போது இந்த தகவல் உலகம் முழுவதும் உள்ள கூகுள் குரோம் பிரௌசர்களின் பயனர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், அமெரிக்க நீதித்துறை எந்த வழக்குகளை தொடுத்தாலும், தாங்கள் அதனை எதிர்கொள்வோம் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது. அமெரிக்க நீதித்துறையின் இந்த முன்மொழிவுகள் அரசாங்கம் அத்துமீறலை குறிக்கிறது எனவும் இது நுகர்வோருக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் கூகுள் தெரிவித்திருக்கிறது.

அந்த வகையில், நீங்கள் உங்களின் லேப்டாப், PC, மொபைல் என அனைத்திலும் கூகுள் குரோம் பிரௌசரை தான் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இது உங்களுக்கான செய்திதான். கூகுள் குரோமை போன்று பல்வேறு பிரௌசர் இருக்கின்றன. அவற்றையும் நீங்கள் தெரிந்துவைத்துக்கொள்வது ஒருவேளை எதிர்காலத்தில் உங்களுக்கு கைக்கொடுக்கலாம். இந்நிலையில், கூகுள் குரோம் பிரௌசர் அல்லாது வேறு மூன்று பிரௌசர்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம். 

பிரேவ் 

பிரேவ் (Brave) என்ற இந்த பிரோசர் இலவசமாக கிடைக்கக் கூடிய ஒன்றாகும். தனியுரிமை மற்றும் விளம்பரங்களை தடுக்கும் திறன்கொண்ட பிரௌசராக இது அறியப்படுகிறது. அதாவது, நீங்கள் எந்த தளத்தை பயன்படுத்தினாலும் அதில் வரும் பெரும்பான்மையான விளம்பரங்களை இந்த பிரௌசர் உங்களுக்கு காட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாஃப்ட் எட்ஜ்

கூகுள் குரோம் பிரௌசருக்கு பின் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் பிரௌசர்,  மைக்ரோசாஃப்ட் எட்ஜ் ஆகும். இதனை உலகம் முழுவதும் 11% பயனர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த பிரௌசரை மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. 

ஆப்பிள் சஃபாரி

கூகுள் குரோம், மைக்ரோசாஃப்ட் எட்ஜ் (Microsoft Edge) ஆகியவற்றுக்கு பின் அதிகமானோர் பயன்படுத்தும் பிரௌசர் ஆப்பிள் சஃபாரி ஆகும். இது ஆப்பிள் நிறுவனத்தால் கொண்டுவரப்பட்டது. உலகம் முழுவதும் 8.8% பயனர்கள் இதை பயன்படுத்துகின்றனர். இந்த பிரௌசர் 2003ஆம் ஆண்டு அறிமுகமானது. 

மோசில்லா ஃபயர்ஃபாக்ஸ்

மோசில்லா நிறுவனம் சார்பில் கொண்டு வரப்பட்ட இந்த மோசில்லா ஃபயர்ஃபாக்ஸ் (Mozilla Firefox) பிரௌசரை பெரும்பான்மையானோர் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது Windows, Linux, ஆண்ட்ராய்ட், Mac OS போன்ற இயங்குதளங்களில் பயன்படுத்தலாம். உலகளவில் அதிக பயன்படுத்தப்படும் நான்காவது பிரௌசர் இதுதான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.