பாலக்காடு தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்​காடு சட்டப்​பேரவை தொகுதி இடைத்​தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இதுகுறித்து தேர்தல் அதிகாரி​ சித்ரா நேற்று கூறிய​தாவது: போலி வாக்​காளர்கள் மற்றும் வாக்​காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் செய்​ததாக எழுந்த புகார்​களின் அடிப்​படை​யில், விசாரணை நடத்​தப்​பட்டு, அத்தகைய நபர்​களின் பட்டியல் தயாரிக்​கப்​பட்​டது. இவர்​களின் பட்டியலை வாக்​குச் சாவடி தலைமை அதிகாரி​களிடம் ஒப்படைத்​துள்ளோம். பட்டியலில் உள்ளவர்கள் வாக்​களிக்க முன்​வந்​தால், அவர்களை வாக்​களிக்க அனும​திப்​ப​தற்கு முன் அவர்​களின் புகைப்​படம் மற்றும் எழுத்​துப்​பூர்வ சாட்​சி​யத்தை தலைமை அதிகாரி பெறு​வார்.

அவர்கள் வாக்​களித்​தால், மக்கள் பிரதி​நி​தித்துவச் சட்டத்​தின் 31-வது பிரி​வின் கீழ் நடவடிக்கை எடுக்​கும்​போது அது அவர்​களுக்கு எதிரான சாட்​சி​யமாக மாறும். மேலும் குற்றம் நிரூபிக்​கப்​பட்​டால், ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்​டும் ​வி​திக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறினார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.