மும்பை இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, நவம்பர் 13 ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு நடந்தது. இன்று இரண்டாம் கட்டமாக 37 தொகுதிகளுக்கு 14,218 வாக்குச்சாவடிகளில், இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்றைய தேர்தலில் முதவர் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா, எதிர்க்கட்சி தலைவர் அமர் குமார் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். […]