மொராதாபாத் இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலின் போது வாக்களர்களை அச்சுறுத்தியதாக 5 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 7 மணி முதல் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், ஒரு சில இடங்களில் மோதல் சம்பவங்கள் நடந்தாலும், வாக்குப்பதிவு சுமூகமாக நடந்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொராதாபாத் பகுதியில் உள்ள பைகான்பூர் மற்றும் மிலாக் சிரி ஆகிய கிராமங்களில் வாக்குச் சாவடியில் காவல் பணியில் […]