டெல்லி: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநில 2வது கட்டத் தேர்தலையொட்டி, பிரதமர் மோடி, வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘முழு உற்சாகத்துடன் வாக்குப்பதிவில், பங்கேற்கவும்,’ வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறும், மகாராஷ்டிராவில் இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் தங்கள் குரலைக் கேட்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சட்டமன்றத் தேர்தலில் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்குவேண்டுகோள் விடுத்துள்ளார். உத்தரபிரதேசத்துக்கு அடுத்தப்படியாக அதிக சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா, இந்த மாநிலத்திலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2வது […]