சமீபத்தில் நயன்தாரா குறித்த ஆவணப் படம் ஒன்று வெளியானது. அந்த ஆவணப்படத்தின் டிரைலரன் வெளியான போது நடிகை நயன்தாரா, நடிகர் தனுஷுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், “நானும் ரௌடிதான்’ திரைப்படத்தின் பாடல் வரிகளை ஆவணப்படத்தில் பயன்படுத்தக் கூடாது என்பது எந்த அளவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது உங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் புரியும்.
தடையில்லா சான்றிதழ் (NOC) மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என்மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு ரூ,10 கோடி நஷ்டஈடு கேட்கப்பட்டிருப்பது மிகவும் விநோதமானதாக இருக்கிறது.” எனக் கட்டமாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், தனுஷின் தந்தை இயக்குநர் கஸ்தூரி ராஜா சமீபத்தில் இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், “எங்கள் முதுகுக்குப் பின்னால் பேசுபவர்கள் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எனக்கு தலைக்கு மேல் வேலை இருக்கிறது. என் மகனுக்கும் அப்படித்தான். நிற்கவே நேரமில்லாமல் ஓடுகிறோம். இந்த நிலையில், மற்றவர்களின் விமர்சனத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் என்னால் கூறமுடியும். நடிகர் தனுஷிடம் என்.ஓ.சி வாங்குவதற்கு இரண்டு வருடம் காத்திருந்ததாக நயன்தாரா கூறியதெல்லாம் பொய். இது குறித்து மேலும் பேச நான் விரும்பவில்லை. நானும், என் மகனும் இப்போது வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…