நெட்பிளக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாராவின் வாழ்க்கை மற்றும் திருமணம் பற்றிய ‘Nayanthara: Beyond the Fairytale’ என்ற ஆவணப்படம் நவம்பர் 18 ஆம் தேதி வெளியானது.
அதில் நயன்தாரா, சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தது ஏன் என்பது குறித்தும், காதல் வாழ்க்கை மற்றும் சினிமா பயணம் குறித்தும் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார்.
இந்த ஆவணப்படத்தில் இயக்குநர் அட்லீ, விஷ்ணு வரதன், நெல்சன் மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் , நடிகர் நாகர்ஜுனா உள்ளிட்ட பலரின் பேட்டிகளும் அடங்கியிருக்கிறது. Nayanthara: Beyond the Fairytale’ தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் நயன்தாரா அந்த ஆவணப்படத்தில் இடம்பெற்ற படக்காட்சிகளின் தயாரிப்பாளர்களைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கை இங்கே!
நீங்கள் விரும்பிப் படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…