EPF Withdrawal: இபிஎஃப்ஒ உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்கள் இபிஎஃப் கணக்கில் ஆன்லைன் முறைகள் மூலம் உங்கள் செயல்பாடு இன்னும் சுலபமாகி விட்டது என்பதை அறிந்துகொள்வது நல்லது. இபிஎஃப் கணக்கில் (EPF Account) உள்ள தொகையை எடுப்பது, அட்வான்ஸ் பணத்தை எடுக்கவும், ஓய்வூதியத்தை ஆன்லைனில் க்ளெய்ம் செய்யவும் ஆன்லைன் செயல்முறைகள் மிக உதவியாக இருக்கும். இந்த பணிகளை இபிஎஃப்ஓ உறுப்பினர் போர்டல் (EPFO Member Portal) வழியாகவோ அல்லது EPFO சேவைகளுக்கு வசதியான அணுகலை வழங்கும் உமங் செயலி (UMANG App) மூலமாகவோ செய்யலாம்.
பல்வேறு தேவைகளுக்காக இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) இபிஎஃப் கணக்கிலிருந்து பல்வேறு வகையில் பணம் எடுக்கிறார்கள். இவற்றுக்கான வெவ்வேறு தகுதி அளவுகோல்கள் உள்ளன என்பதை உறுப்பினர்கள் கவனிக்க வேண்டும். கூடுதலாக, உறுப்பினர்கள் தங்கள் மொபைல் சாதனங்களில் Umang செயலியைப் பயன்படுத்தி தங்கள் PF கணக்குகளை எளிதாகக் கண்காணிக்க முடியும்.
உமங் செயலி மூலம் பிஎஃப் தொகையை வித்டிரா செய்வது எப்படி?
உமங் செயலி மூலம் இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers), தங்கள் பிஎஃப் தொகை வித்டிராயலுக்கான கோரிக்கையின் நிலையைக் கண்காணிக்கலாம். “EPFO” செக்ஷனுக்குச் சென்று, செயலிக்குள் உங்கள் கோரிக்கையின் முன்னேற்றத்தைச் சரிபார்க்க கண்காணிப்பதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
உமங் செயலியை EPFO சேவைகளைப் பயன்படுத்துவதற்கான செயல்முறை இதோ:
– Google Play Store அல்லது Apple App Store இலிருந்து Umang செயலியைப் பதிவிறக்கவும்.
– செயலியைத் திறந்து, உங்கள் ஆதார் எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.
– லாக் இன் செய்தவுடன் பட்டியலில் இருந்து “EPFO” சேவையைத் தேர்ந்தெடுக்கவும்.
– உங்கள் இபிஎஃப் இருப்பைச் (EPF Balance) சரிபார்த்தல், க்ளெய்ம் செய்வது, KYC விவரங்களைப் புதுப்பித்தல் போன்ற குறிப்பிட்ட EPFO சேவையைத் தேர்வுசெய்யவும்.
– பரிவர்த்தனையை முடிக்க திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
PF Withdrawal: உமங் செயலி மூலம் PF பணத்தை எடுப்பதற்கான செயல்முறை இதோ:
– செயலியைத் திறந்து, உங்கள் ஆதார் எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.
– லாக் இன் செய்த பிறகு, பட்டியலில் இருந்து “EPFO” சேவையைத் தேர்ந்தெடுக்கவும்.
– “Raise Claim” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
– உங்கள் UAN எண்ணையும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP -யையும் உள்ளிடவும்.
– நீங்கள் பணத்தைத் திரும்பப் பெற விரும்பும் வகையைத் தேர்வு செய்யவும்.
– தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.
– உங்கள் கோரிக்கைக்கான ஒப்புகை எண்ணைப் பெறுவீர்கள்.
ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு நிரந்தர யுனிவர்சல் கணக்கு எண் (UAN) ஒதுக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் வாழ்நாள் சேவையின் போது பலன்களைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும்.
உமங் செயல்பாட்டில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில EPFO சேவைகள் இதோ:
– EPF இருப்பை சரிபார்க்கலாம்.
– கோரிக்கையை எழுப்பலாம்.
– KYC விவரங்களைப் புதுப்பிக்கலாம்.
– பாஸ்புக்கை காணலாம்.
– ஜீவன் பிரமான் சான்றிதழை உருவாக்கலாம்.
– ஓய்வூதிய கொடுப்பனவு ஆணையை (PPO) பதிவிறக்கலாம்.
– குறைகளை பதிவு செய்து கண்காணிக்கலாம்.