அனல் பறக்கப்போகும் இந்தியா – ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்; எங்கு, எப்போது பார்ப்பது? – அனைத்தும் இதோ

When And Where To Watch India vs Australia Perth Test 2024: பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் (Border Gavaskar Trophy) நாளை (நவ. 22) தொடங்குகிறது. மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. மேலும், இந்த தொடர் ஜனவரி மாதம் முதல் வாரம் வரை நீடிக்கும். எனவே அடுத்த 45 நாள்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு சரியான விருந்து காத்திருக்கிறது. 

பார்டர் – கவாஸ்கர் கோப்பை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் மாறி மாறி நடைபெறும். அந்த வகையில் கடந்த 2018-19, 2020-21 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இழக்கவில்லை என்பதுதான் இங்கு குறிப்பிடதக்க ஒன்றாகும். அந்த வகையில், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி (Team Australia) இந்தியாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து தொடரை கைப்பற்றும் நோக்கில் உள்ளது. 

ஆஸ்திரேலியா இந்த தொடரை கைப்பற்றினால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பும் பிரகாசமாகும். இந்திய அணி (Team India) WTC இறுதிப்போட்டிக்கு செல்ல ஆஸ்திரேலியாவை 4 டெஸ்ட் போட்டிகளில் தோற்கடித்து, ஒன்றில் டிரா செய்தாக வேண்டும். இரு அணிகளும் தங்களுக்கே உரிய பலம் மற்றும் பலவீனங்களுடன் இந்த தொடரை எதிர்கொள்கறது. அந்த வகையில், முதலில் இரண்டு அணிகளின் ஸ்குவாட், உத்தேச பிளேயிங் லெவன் ஆகியவற்றை இங்கு காணலாம்.

IND vs AUS: இரு அணிகளின் முழுமையான ஸ்குவாட்

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர். 

டிராவலிங் ரிசர்வ்ஸ்: முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது

முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய ஸ்குவாட்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, மிட்செல் மார்ஷ், ஜோஷ் ஹேசில்வுட்,   மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலண்ட்

IND vs AUS: இரு அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன்

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரேல், நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது சிராஜ்

ஆஸ்திரேலியா: நாதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி/ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், நாதன் லயான், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க்

IND vs AUS: முதல் டெஸ்ட் போட்டியை எங்கு, எப்போது பார்ப்பது? 

முதல் டெஸ்ட் போட்டி, மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானம் (Perth Optus Stadium) நாளை (நவ. 22) தொடங்குகிறது. இந்திய நேரப்படி காலை 7.50 மணி முதல் போட்டி தொடங்கும். அதற்கு அரை மணிநேரம் முன்னதாக காலை 7.20 மணிக்கு டாஸ் போடப்படும். முதலில் டாஸை வெல்லும் கேப்டன்கள் பந்துவீச்சை தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மைதானத்தில் மொத்தம் 60 ஆயிரத்து 266 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கும் வசதி உள்ளது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வோர்க் சேனல்கள் (Star Sports Network) மூலம் தொலைக்காட்சியில் நேரடியாக காணலாம். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) மூலம் ஓடிடியில் காணலாம். டிடி ஸ்போர்ட்ஸ் சேனலும் இந்தியாவில் இலவசமாக இந்த தொடரை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.