அரும்பாக்கம் விநாயகர் கோயில் விவகாரம்: நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு நடவடிக்கை – மாநகராட்சி உறுதி

சென்னை: அரும்​பாக்கம் ஜானகிராமன் காலனி​யில் குடி​யிருப்பு கட்டிடத்தை ஒட்டி சாலை​யில் பாலவிநாயகர் கோயில் நிறுவப்பட்​டுள்​ளது. இக்கோ​யில் அருகில் உள்ள வீடு ஒன்றில் விலங்​குகள் நல ஆர்வலர், நாய்​களுக்கு உணவளித்து வந்துள்ளார். இந்த நாய்​கள், அசைவ உணவை உண்டு​விட்டு, எலும்​புகளை விநாயகர் கோயி​லில் போட்டு அசுத்தம் செய்வதாக புகார் எழுந்தது.

எனவே, நாய்களுக்கு இப்பகு​தி​யில் உணவளிப்பதை தவிர்க்​கு​மாறு பக்தர்கள் சார்​பில் விலங்​குகள் நல ஆர்வலரிடம் வேண்​டு​கோள் விடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்நிலை​யில், விநாயகர் கோயில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்​பட்​ட​தாக​வும், அதை அகற்ற கோரி​யும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் விலங்​குகள் நல ஆர்வலரின் உறவினர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்​தார்.

இந்த வழக்​கில் மாநக​ராட்சி நிர்​வாகம், பக்தர்​களுடன் கலந்​து பேசி தீர்வு காணு​மாறு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்​த​தாகக் கூறப்​படு​கிறது. இந்நிலை​யில், ஆக்கிரமிப்​பில் உள்ள கோயிலை மாநக​ராட்சி இன்னும் அகற்​ற​வில்லை என நீதி​மன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்​பட்​டது. இதில் வட்டாட்​சியர் நேரில் ஆய்வு செய்து, மாநக​ராட்சி சாலையை ஆக்கிரமித்து கோயில் கட்டப்​பட்​டதாக அறிக்கை அளித்துள்ளார்.

அதன் அடிப்​படையில் கோயிலை, பக்தர்களே அகற்ற வேண்​டும். இல்லா​விட்​டால் மாநக​ராட்சி அகற்ற வேண்​டும் என உயர் நீதி​மன்றம் தீர்ப்​பளித்​திருந்​தது. அதன்​படி, கோயிலை அகற்ற பக்தர்​களுக்கு கொடுத்த அவகாசம் முடிந்த நிலை​யில், காவல்​துறை பாது​காப்புடன் சென்று, மாநக​ராட்சி அதிகாரிகள் நேற்று முன்​தினம் கோயிலை அகற்ற முயன்​றனர். அதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரி​வித்​தனர்.

இதற்​கிடை​யில் பக்தர்கள் சார்​பில் உயர் நீதி​மன்றத்​தில் வழக்கு தொடரப்​பட்டு, கோயிலை அகற்ற இடைக்கால தடை பெறப்​பட்டது. இதுதொடர்பாக பக்தர்கள் கூறிய​தாவது:இந்த கோயில் தொடர்பாக சென்னை மாநகர சிவில் நீதி​மன்​றத்​தில் நிலுவை​யில் உள்ள வழக்கு குறித்து, அவமதிப்பு வழக்​கில் தெரிவிக்க​வில்லை. இந்த கோயில் ஆக்கிரமிப்பாக இருந்​தா​லும், மக்களின் மதநம்பிக்கை சார்ந்​தது. 40 ஆண்டு​ களாக மக்கள் வழிபட்டு வருகின்​றனர்.

அதனால் கோயிலை அகற்​றாமல் இருக்க, அரசு சார்​பில் சரியான வாதங்களை வைத்து, எங்கள் மத நம்பிக்கை​யைப் பாது​காக்க வேண்​டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். இதுதொடர்பாக மாநக​ராட்சி அதிகாரி​களிடம் கேட்​ட​போது, “தற்​போது இந்த கோ​யில் தொடர்பாக 2 வழக்​கு​கள் நீ​தி​மன்​றத்​தில் நிலுவை​யில் உள்ளன. அவற்றின் தீர்ப்பு அடிப்​படை​யில் நட​வடிக்கை எடுக்​கப்​படும்​” என்றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.