சென்னை ரயில்களில் இருக்கைகளை அதிகரிக்க பொதுப்பெட்டிகளை கூடுதலாக இணைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, பயணிகளின் தேவையை கருதி இந்த மாத இறுதிக்குள் 370 ரயில்களில் ஆயிரம் முன்பதிவில்லா பெட்டிகளை புதிதாக இணைக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இதில், தெற்கு ரயில்வேயில் 51 எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொதுப்பெட்டிகளை இணைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில், 24 எக்ஸ்பிரஸ் […]