உத்தரபிரதேசம்: மருத்துவமனையில் தீ விபத்து – பலியான குழந்தைகள் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது.

இந்த மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு வார்டில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்த்;உ ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் மூச்சுத்திணறல், தீக்காயங்களால் 10 குழந்தைகள் உயிரிழந்தன. மேலும், 39 குழந்தைகள் காயங்களுடன் மீட்கப்பட்டன. இதில் சில குழந்தைகளுக்கு பயங்கர தீக்காயங்கள் ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தீ விபத்தில் காயமடைந்த குழந்தைகளில் மேலும் 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதனால் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.