உங்களுக்குப் பிடித்த வெப் சீரிஸ் அல்லது திரைப்படத்தைப் பார்க்க OTT சந்தாவைப் பெற, தனியாகச் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட சில ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்தால், OTT சேவைகளை முற்றிலும் இலவசமாக அனுபவிக்க முடியும். அந்த வகையில், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், அமேசான் பிரைம் இலவச சந்தா கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இவை இரண்டும் தினசரி தரவுத் திட்டங்கள்.
ஏர்டெல் பல வகையான வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் பல விதமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்கள் இலவச OTT சந்தாவை வழங்குகின்றன. அமேசான் பிரைம் வீடியோ இலவச சந்தா உடன், உங்கள் தேவைகளுக்கு ஏற்ப இரண்டு தினசரி டேட்டா திட்டங்களில் இருந்து ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். இது மட்டுமின்றி, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் சந்தாவும் இந்தத் திட்டங்களுடன் கிடைக்கிறது. இதன் மூலம் 22க்கும் மேற்பட்ட OTT சேனல்களையும் கண்டு அனுபவிக்கலாம்.
ஏர்டெல்லின் ரூ.838 OTT திட்டம்
அமேசான் பிரைம் சேனலை 56 நாட்கள் முழு வேலிடிட்டியுடன் இலவசமாக அனுபவிக்க விரும்பினால், இந்த ரூ.838 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், தினமும் 3ஜிபி டேட்டா 56 நாட்களுக்கு கிடைக்கும் மற்றும் பயனர்கள் தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பலாம். இது தவிர, அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு விருப்பமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் சந்தாவை வழங்குவது மட்டுமல்லாமல், நீங்கள் Airtel Xstream Play Premium நன்மைகளையும் பெறுகிறீர்கள்.
மற்ற நன்மைகளைப் பற்றி பேசுகையில், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தா 56 நாட்களுக்கு கிடைக்கிறது. பயனர்கள் 22+ OTT சேனல்களை காணலாம். இது தவிர, அப்பல்லோ 24/7 சர்க்கிள் அணுகல் மற்றும் மூன்று மாதங்களுக்கு இலவச ஹெலோ ட்யூன்கள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டம் தகுதியான சந்தாதாரர்களுக்கு வரம்பற்ற 5G டேட்டாவை வழங்குகிறது.
ஏர்டெல்லின் ரூ.1,199 OTT திட்டம்
நீண்ட நாள் வேலிடிட்டி விரும்பினால், ரூ.1,199 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம். இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில், தினசரி 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, இதனுடன் தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்ப முடியும். அனைத்து நெட்வொர்க்குகளிலும் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ளலாம். மேலும், Amazon Prime சந்தா 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
முந்தைய திட்டத்தைப் போலவே, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் மூலம் 22+ OTT சேனல்களை கண்டு ரசிக்கலாம். பயனர்கள் Apollo 24/7 சர்கிளிற்கான மூன்று மாத அணுகலைப் பெறுகிறார்கள் மற்றும் RewardsMini சந்தாவுடன் இலவச HelloTunes சலுகையையும் பெறுகிறார்கள். இந்த திட்டம் வரம்பற்ற 5G டேட்டாவையும் வழங்குகிறது.