பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசியமான வசதிகளை வழங்குவதற்காக நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராளுமன்ற தகவல் கருமபீடம் வெற்றிகரமாகப் பூர்த்தி

ஒன்லைன் முறைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்கள் பெறப்பட்டன

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதல் அமர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எளிதாக்குவதற்காக 2024 நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, “பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தகவல் கருமபீடம்” வெற்றிகரமாகப் பூர்த்திசெய்யப்பட்டது.

இதில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட 200ற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு உறுப்பினர்களுக்குத் தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்கள் வழங்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் அடையாள அட்டைக்கான புகைப்படங்களை எடுத்தல் மற்றும் இலத்திரனியல் வாக்களிப்பு நோக்கத்திற்காக கைரேகைகளை பெறுதல் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதலாவது கூட்டத்தை நடத்துவதற்காக, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களையும் பெறுவதற்கு பாராளுமன்ற இணையதளம் வழியாக உரிய தகவல்களை உள்ளிடும் வசதி (Online) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.