புதிய பாராளுமன்றத்தின், பிரதி சபாநாயகர், சபைத் தலைவர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொரடா ஆகியோர் தெரிவு செய்யப்படனர்.
பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் ரிஸ்வி சாலி 10வது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக இன்று பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டார்.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் பிரதி சபாநாயகரின் பெயர் முன்மொழியப்பட்டதுடன், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி பொல்ராஜ் அதனை ஆமோதித்தார்.
இதனைத் தொடர்ந்து, 10வது பாராளுமன்றத்தின் சபைத்தலைவராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவு செய்யப்பட்டதுடன், ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவு செய்யப்பட்டதாக சபாநாயகர் அசோக ரன்வெல்ல அறிவித்தார்.
அத்துடன், பாராளுமன்றத்தின் குழுக்களின பிரதித் தவிசாளராக ஹேமாலி வீரசேகரக நியமிக்கப்பட்டார். இதற்கான முன்மொழிவு அமைச்சர்; சுனில் ஹந்துன் ஹெத்தியினால் முன்வைக்கப்பட்டது.