புரோ கபடி லீக்: யு மும்பா அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி

நொய்டா,

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி – குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 39-39 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 31-29 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

12 ஆட்டங்களில் ஆடியுள்ள யு மும்பா அணி 7 வெற்றி, 4 தோல்வி, 1 டிராவுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. 11 ஆட்டங்களில் ஆடியுள்ள தெலுங்கு டைட்டன்ஸ் அணி 7 வெற்றி, 4 தோல்வியுடன் 5-வது இடத்தில் உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.