பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் ரிஸ்வி சாலி 10வது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக சில நிமிடங்களுக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்டார்.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் பிரதி சபாநாயகரின் பெயர் முன்மொழியப்பட்டதுடன், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி பொல்ராஜ் அதனை ஆமோதித்தார்.