சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி ரிலீஸாக திரைக்கு வந்திருந்தது அமரன்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து பலரின் பாராட்டுகளையும் அள்ளினார். இத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் சாய் பல்லவி தனது போன் நம்பரைக் ஒரு பேப்பரில் எழுதி அதை சிவகார்த்திகேயனிடத்தில் கொடுப்பார்.
அந்த காகிதத்தில் இருந்தது என்னுடைய நம்பர் எனவும், அதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கேட்டும் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் வாகீசன் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த காகிதத்தில் உள்ள எண்ணை சாய் பல்லவியின் போன் நம்பராக எண்ணி பலருக்கு அந்த கல்லூரி மாணவருக்கு கால் செய்து வருகிறார்களாம். அறிமுகமில்லாதவர்களிடமிருந்து வரும் அழைப்புகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறாராம் அந்த மாணவர்.
இதுபோன்ற தொடர்ந்து வரும் அழைப்புகளால் அவரால் தொடர்ந்து படிக்கவும் மற்ற செயல்களில் கவனம் செலுத்தவும் முடியவில்லை என்றும் இதனால் பிற முக்கியமான அழைப்புகளையும் தவறவிட்டுவதாக குற்றம் சாட்டிய மாணவர் வாகீசன், படக்குழுவை சமூக வலைதளப் பக்கங்களின் மூலமாக தொடர்புக் கொள்ளவும் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் எதிர் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. இப்படியான கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக 1.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…