இந்தியாவின் அரிய மொழிகளின் முதல் மொழிபெயர்ப்பு நூல் திருக்குறள்: மத்திய அரசின் சிஐசிடி வெளியிடுகிறது

புதுடெல்லி: இந்திய அரசி​யலமைப்பு சட்டத்​தின் 8-வது அட்டவணை பட்டியலில் 22 மொழிகள் இடம்​பெற்றுள்ளன. அவற்றுடன் நாடு முழு​வதும் பல மொழிகள் பேசப்​படு​கின்றன. அவற்றில் பலவற்றுக்கு எழுத்துகள் கிடை​யாது. இதுபோன்ற அரிய மொழிகளை பேசுபவர்​களும் படிக்​கும் வகையில் திரு​வள்​ளுவரின் திருக்​குறள் வெளி​யாகிறது.

இந்த தகவலை, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் மத்திய கல்வித் துறை அமைச்சக அதிகாரிகள் தெரி​வித்​துள்ளனர். சென்னை​யில் உள்ள செம்​மொழி தமிழாய்வு மத்திய நிறு​வனம் (சிஐசிடி) திருக்​குறளை மொழிபெயர்த்து வருகிறது. இதன் சார்​பில் நீலகிரி மாவட்ட பழங்​குடிகளின் 6 மொழிகளி​லும் திருக்​குறள் வெளி​யாகிறது. அவற்றில் இருளா, காட்டு நாயகா, கோத்தா, குரும்பா, பனியா மற்றும் தோடா ஆகிய மொழிகள் இடம் பெற்றுள்ளன. இந்த மொழிகளுக்கு தனி எழுத்​துக்கள் இல்லாத​தால், திருக்​குறள் தமிழ் எழுத்​துக்​களால் வெளி​யாகின்றன. இதுபோன்ற 20 அரிய மொழிகளில் வெளி​யாகும் முதல் மொழிபெயர்ப்பு நூலாக திருக்​குறள் அமைந்​துள்ளது.

இதேபோல், உத்தர பிரதேசத்​தின் மேற்கு பகுதி வட்டார மொழியான பிரிஜ் பாஷா, வாராணசி​யின் காஷிகா, புந்​தேல்​கண்ட் பகுதி​யின் புந்​தேலி ஆகிய​வற்றி​லும் திருக்​குறள் நூல்கள் வெளியாக உள்ளன. ராஜஸ்​தானின் மேவாரி மற்றும் ராஜஸ்​தானி, குஜராத்​தின் கட்சி, ஹரியானா​வின் ஹரியான்வீ, உத்த​ராகண்​டின் கடுவாலி, பிஹாரின் பாஜிகா, உ.பி. மற்றும் ம.பி.​மாநிலங்​களின் பகேலி, மகராஷ்டிரா​வின் மகாய் உள்ளிட்ட மொழிகளுக்​கும் திருக்​குறள் வெளி​யாகிறது.

எட்டாவது அட்ட​வணைப் பட்டியலில் உள்ள மொழிகள் மற்றும் உலகின் பல நாட்டு மொழிகளில் சிஐசிடி சார்​பில் திருக்​குறள் மொழிபெயர்க்​கப்​பட்டு உள்ளது. வரும் நாட்​களில் தமிழ் சம்​மந்​தப்​பட்ட ​விழாக்​களில் சிஐசிடி​யின் அரிய மொழிகளின் ​திருக்​குறள் நூல்​களை​யும் பிரதமர் மோடியே வெளி​யிடு​வார் என எ​திர்​பார்க்​கப்​படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.