டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு அரசு அனுமதி தரவில்லை: தமிழக இயற்கை வளங்கள் துறை விளக்கம்

சென்னை: மதுரை மாவட்டம் நாயக்​கர்​பட்​டி​யில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்​தான் ஜிங்க் நிறு​வனத்​துக்கு தமிழக அரசு சார்​பில் எந்த அனும​தி​யும் வழங்​கப்​பட​வில்லை என்று தமிழக இயற்கை வளங்கள் துறை தெரி​வித்​துள்ளது.

ஸ்டெர்​லைட் நிறு​வனத்தை நடத்திய வேதாந்தா குழு​மத்தை சேர்ந்தது இந்துஸ்​தான் ஜிங்க் நிறு​வனம். இந்த நிறு​வனம், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்​ப​தற்காக மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்​தில் உள்ள அரிட்​டாபட்டி, மீனாட்​சிபுரம், கூலானிப்​பட்டி, செட்​டி​யார்​பட்டி, அ.வல்​லா​ளப்​பட்டி, சண்முகநாத​புரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்​கலம் உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கர் நிலத்தை ஏலம் எடுத்​துள்ளது.

சுரங்​கங்​கள், கனிமங்கள் மேம்​பாடு மற்றும் ஒழுங்​கு​முறை சட்டத்​தின்​கீழ் கடந்த நவம்பர் 7-ம் தேதி நடத்​தப்​பட்ட 4-வது ஏலத்​தில் மேலூர் நாயக்​கர்​பட்டி பகுதி டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தை இந்துஸ்​தான் ஜிங்க் நிறு​வனம் எடுத்​துள்ளது. இதற்கு சுற்றுச்​சூழல் ஆர்வலர்​கள், பொது​மக்​களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்நிலை​யில், தமிழக அரசின் இயற்கை வளங்கள் துறை வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்ள​தாவது: மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்​கர்​பட்டி கிராமத்​தில் டங்ஸ்டன் கனிமத்​துக்கு ஆய்வுடன் இணைந்த சுரங்க குத்தகை உரிமம் வழங்க மத்திய அரசால் கடந்த ஜூன் 26-ம் தேதி ஏல அறிவிப்பு வெளி​யிடப்​பட்​டது. இதைத் தொடர்ந்து, இந்துஸ்​தான் ஜிங்க் லிமிடெட் நிறு​வனம் தகுதியான நிறு​வனமாக சுரங்க அமைச்​சகத்​தால் நவ.7-ல் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது. இதுபற்றி அந்நிறு​வனத்​திடம் இருந்து தமிழக அரசு எந்த ​விண்​ணப்​ப​மும் பெற​வில்லை. அனு​மதி ஏதும் வழங்​கப்​பட​வில்லை என கூறப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.