`தமிழக அரசு 'அமரன்' படத்துக்கு அதைச் செய்யணும்!’ – முதல்வருக்குக் கடிதம் எழுதிய தயாரிப்பாளர்கள்

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்ற படம் அமரன். இந்திய ராணுவத்தில் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாகப் பணிபுரிந்து தீவிரவாதிகளுடனான மோதலின் போது உயிரை விட்ட தமிழகத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக வந்த இந்தப் படம் வசூலிலும் சாதனை படைத்தது.

பலதரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்ற இந்தப் படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறது, முன்னாள், இந்நாள் திரைப்படத் தயாரிப்பாளார்கள் சேர்ந்து உருவாக்கிய ‘திரைப்படத் தயாரிப்பாளர்கள் குழு’.

வி.சி.குகநாதன், முக்தா ரவி, ஜெயந்தி கண்ணப்பன் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக இருக்கும் இந்தச் சங்கம் ‘அமரன்’ படத்துக்கு வரிவிலக்குக் கேட்டிருப்பது குறித்து அதன் செயலாளர் ஜெயந்தி கண்ணப்பனிடம் பேசினோம்.

ஜெயந்தி கண்ணப்பன்

”நாட்டுக்காக வீரமரணம் அடைஞ்சு உயிரைத் தியாகம் செய்த ஒரு வீரரின் வாழ்க்கையைப் பேசியிருக்கு இந்தப்படம். நாட்டுப்பற்றைப் பேசுகிற, தேச நலனை உயர்த்திப் பிடித்துப் பேசுகிற படங்கள் வெளியாகிறப்ப சம்பந்தப்பட்ட படங்களுக்குக் கேளிக்கை வரி செலுத்துவதிலிருந்து அரசாங்கம் விலக்கு தர்றதுங்கிறது பொதுவா நடக்கிற விஷயம்தான். பாலிவுட்ல ‘தங்கல்’ முதலான சில படங்களுக்கு இந்த அடிப்படையில் ஏற்கனவே வரிச்சலுகை கொடுக்கப் பட்டிருக்கு.

இந்திய – சீனப் போர் நடந்தப்ப ராணுவ வீரர்களை ஊக்குவிக்கறதுக்காகவே டெல்லி போய் கலை நிகழ்ச்சிகள் நடத்திய வரலாறெல்லாம் தமிழ் சினிமாவுக்கு இருக்கு. அதனாலதான் ‘அமரன்’ படத்துக்கும் தமிழ் நாடு அரசுகிட்ட இந்தப்  படத்துக்கு வரிவிலக்குத் தரணும்கிற கோரிக்கையை வைச்சு நம்ம முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கோம். இந்த மாதிரியான படங்களை ஊக்குவிக்கிறது சினிமாவுக்கு ரொம்பவே ஆரோக்கியமான ஒரு விஷயம்” என்கிறார் இவர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MadrasNallaMadras

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.