தொழிலாளரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தல்

சென்னை: தொழிலாளர் நலத்​துறை​யின், தொழிலக பாது​காப்பு மற்றும் சுகாதார இயக்​ககம் சார்​பில், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் இயங்​கும் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்​சாலைகளில் உயரமான பணியிடங்​களில் பணிபுரி​யும் தொழிலாளர்​களுக்கான பாது​காப்பு மற்றும் பராமரிப்பு வழிமுறைகள் குறித்த விழிப்பு​ணர்வு கூட்டம் ஸ்ரீபெரும்​புதூர், ஹூண்​டாய் நிறு​வனத்​தில் நேற்று நடை பெற்​றது.

கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய தொழிலாளர் நலத்​துறை அமைச்சர் சி.வி.கணேசன், ‘‘இந்தியா​வில் உற்பத்தி துறை​யில் பணிபுரி​யும் பெண்​களில் 43 சதவீதம் பேர் தமிழகத்​தைச் சேர்ந்த பெண் தொழிலா​ளர்​கள். அவர்​களின் பாது​காப்பை உறுதி​செய்ய வேண்​டும். தொழிலாளர்கள் உயிர்விலை மதிக்க முடி​யாதது என்ப​தால் அவர்கள் ஒவ்வொரு​வரின் பாது​காப்​பை​யும் உறுதி செய்ய வேண்​டும்’’ என்றார்.

இக்கூட்​டத்​தில் தொழிலாளர் நலத்​துறை செயலர் கொ.வீரராகவ ராவ், தொழிலக பாது​காப்பு மற்றும் சுகா​தா​ரத்​துறை இயக்​குநர் எஸ்.ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்​கடேஷ், தொழிலக பாது​காப்பு மற்றும் சுகாதாரத்துறை கூடுதல் இயக்​குநர் மு.வே.செந்​தில்​கு​மார், ஹூண்​டாய் நிறு​வனத்​தின் தலைமை உற்​பத்தி அலு​வலர் சி.எஸ்​.கோபால கிருஷ்ணன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.