`ஸ்டாலின் முதல் தனுஷ், நயன்தாரா வரை'; பிரபலங்கள் பங்கேற்றத் திருமண விழா|யார் இந்த ஆகாஷ்-தாரணி தம்பதி

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் – ‘கவின்கேர்’ தாரணி இருவருக்கும் நேற்று திருமணம் (நவம்பர் 21) நடைபெற்றது.

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று கனவுடன் திரைப்படங்களில் பணியாற்றி, பின்பு ‘டவுன் பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிவர் ஆகாஷ் பாஸ்கரன். தி.மு.க அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் உதயநிதிக்கு நெருக்கமானவர்.

ஆகாஷ், `கவின்கேர்’ குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மூன்றாவது மகள் தாரணியை திருமணம் முடித்திருக்கிறார். ‘கவின்கேர்’ நிறுவனத்தைப் பார்த்துக் கொள்வது மட்டுமின்றி, தனிக்கெனத் தனியாக ‘moonbakes’ நிறுவனத்தையும் ஆரம்பித்து நடத்தி வருகிறார் தாரணி. இவர்களது திருமணம் பிரமாண்ட முறையில் சென்னை, திருவான்மியூரிலுள்ள ஶ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. பிரபல புகைப்பட கலைஞரான அமர் ரமேஷின் ‘studio A’ நிறுவனம் திருமணப் புகைப்படங்களை எடுத்திருந்தது.

Photo Album

இவர்களது திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் இருவரும் முன் நின்று நடத்தி வைத்தனர். உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, அன்பில் மகேஷ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர். தனுஷ், நயன்தாரா, அனிருத், சிவகார்த்திகேயன், அட்லி, தமிழரசன் பச்சமுத்து, விக்னேஷ் சிவன், ஆர். ரவிக்குமார் உள்ளிட்ட திரைப்பிரலங்கள் பலரும் இத்திருமண விழாவில் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.